இவர் மட்டும் சரியா ஆடுன போதும்.. உலகக்கோப்பை இந்தியாவுக்குத்தான்: சரியாக கணித்த ரிக்கி பாண்டிங்!!
- 50 ஓவர்களுக்கான உலக கோப்பை தொடர் மே 30ஆம் தேதி துவங்குகிறது
- இந்த உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த உலக கோப்பை தொடர் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் பேசியதாவது..
விராட் கோலி விளையாடுவதை பார்த்தால் அது என்னையே நினைவுப்படுத்தும். அவரின் பல ஸ்டைல்கள் என்னைப்போலவே இருக்கிறது. மைதானத்தில் அவருடைய துடுக்கும், அவரது உடல் மொழியும் அப்படியே என்னைப் போலவே இருக்கிறது. பேட்டிங் ஸ்டைலிலும் அவர் என்னையே நினைவுப்படுத்துகிறார்.
அவருடைய ஒருநாள் போட்டியின் சாதனைகள் ஆச்சரியத்தை அளிக்கிறது. அதனால் தான் இந்திய அணியை நான் அபாயமாக கருதுகிறேன். விராட் கோலி தனது ஆட்டத்தை சிறப்பாக அமைத்துவிட்டால் இந்தியா உலக்கோப்பையை வென்றுவிடும்” என்று தெரிவித்துள்ளார்.