பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது!! மோடிக்கு எந்த தொகுதி??
- வேட்பாளர்களை பாஜக இன்று வெளியிடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பாஜகவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மாலை 5 மணி அளவில் கூடியிருக்கிறது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வருகிற 11-ஆம் தேதி ஆந்திரா தெலுங்கானா உட்பட ஏழு மாநிலங்களில் உள்ள 91 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.
இதற்கான வேட்பாளர்களை பாஜக இன்று வெளியிடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை 23 ஆம் தேதி எண்ணபடும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பாஜகவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மாலை 5 மணி அளவில் கூடியிருக்கிறது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.