மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி!!தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் !! தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
- ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி சென்னை தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 13-ஆம் தேதி தமிழகம் வந்தார்.பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.அதேபோல் நாகர்கோவிலில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைத்தார்.இதில் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியது தொடர்பாக கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் ரா. சாருமதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.அதில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி? என்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது எப்படி அனுமதிக்கலாம்? என்று கேள்வி எழுப்பினார்.மேலும் நேரில் விசாரித்து அறிக்கை தர சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு, கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் ரா. சாருமதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் பாஜக அளித்த புகாரின் பேரில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதில்,சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி சென்னை தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்துள்ளார்.