புதிய படத்தில் ஜோடி சேரும் புது தம்பதிகள்….!!!
- நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
- புது தம்பதிகள் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆர்யா சமீபத்தில் நடைபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில், இவர் நடிகை சாயிஷாவை காதலித்து, வந்தார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவர்களது திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்து கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் இயக்கவுள்ள “டெடி” என்ற படத்தில், புது தம்பதிகள் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் துவங்கவுள்ளது. இப்படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையில் எடுக்கப்படவுள்ளதாகவும், படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.