தேர்தல் பிரசாரத்திற்காக 140 கி.மீ. தூரம் படகில் பயணம் செய்யும் பிரியங்கா காந்தி !!!
- நாடாளுமன்ற தேர்தலுக்காக வரும் 18-ம் தேதி உ.பி.யில் உள்ள கங்கை நதிக்கரையில் பிரியங்கா காந்தி மூன்று நாட்கள் படகு பயணம் செய்கிறார்.
- பிரயாகராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி வாரணாசியின் அஸி காட் வரை செல்கிறார்.
- இந்த பயணத்திற்க்கு “கங்கா யாத்ரா” என பெயரிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகள் தயாராகி உள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். இந்த ஆண்டு அவருடன் பிரியங்கா காந்தியும் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
உ.பி.யில் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு உ.பி. மாநிலத்தில் தேர்தல் பிரசார பணிகளில் பிரியங்கா காந்தி தொடங்கி விட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வரும் 18-ம் தேதி உ.பி.யில் உள்ள கங்கை நதிக்கரையில் பிரியங்கா காந்தி மூன்று நாட்கள் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார்.140 கி.மீ. தூரம் படகில் பயணம் செய்து அங்குள்ள கிராமங்களில் பிரசாரம் செய்யவுள்ளார்.
இப்பயணம் பிரயாகராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி வாரணாசியின் அஸி காட் வரை செல்கிறார்.இந்த பயணத்திற்க்கு “கங்கா யாத்ரா” என பெயரிடப்பட்டுள்ளது. என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜேந்திர திரிபாதி தெரிவித்துள்ளார்.