மூன்று வருடங்களுக்கு பிறகு மலர் டீச்சர் மீண்டும் மலையாளத்தில்!!
- பிரேமம் எனும் மலையாள படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் தமிழ் பொண்ணு சாய் பல்லவி.
- அதன் பிறகு துல்கர் சல்மான் நடித்த களி படத்தில் நடித்திருந்தார்.
- தற்போது மூன்று வருடத்திற்கு பிறகு பகத் பாசிலுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் பெரிய வரவேற்ப்பை பெட்ரா திரைப்படம் ப்ரேமம். இந்த திரைப்படத்தில் நட்பு, காதல் பற்றி மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா ஜெபாஸ்டியன் என மூன்று ஹீரோயின்கள் இருந்தனர். இருந்தும் ரசிகர்கள் நெஞ்சில் நிறைந்த கதாபாத்திரம் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி மட்டும்தான்.
அந்த படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் உடன் களி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என நடிக்க தொடங்கிவிட்டார்.
தற்போது மூன்று வருடத்திற்கு பிறகு, பகத் பாசிலுக்கு ஜோடியாக அதிரன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டரை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மூன்று வருடத்திற்கு பிறகு நடிக்கும் மலையாள படம் என பகிர்ந்துள்ளார்.
DINASUVADU