மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டி!! ஜெ.தீபா அறிவிப்பு
- தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவை தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொண்டர்களின் விருப்பம் காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16,17 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கட்சி அலுவலகத்தில் வழங்கலாம் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.