ப்ரியா வாரியர் மீது இயக்குனர் ஓமர் லாலு புகார்…..!!!

Default Image
  • சினிமா திரையுலகில் கண்ணடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை ப்ரியா வாரியர்.
  • இயக்குனர் ஓமர் லாலு ப்ரியா வாரியர் மீது புகார் அளித்துள்ளார்.

சினிமா திரையுலகில் கண்ணடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை ப்ரியா வாரியர். இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், இவர் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்படுகிறார்.

இந்நிலையில், இயக்குனர் ஓமர் லாலு இயக்கத்தில் உருவான படம் ஒரு அடர் லவ். இந்த படத்தின் கதாநாயகியாக நூரின் ஷெரீப் தான் தேர்வு செய்யப்பட்டார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதால் நூரினை துணை கதாபாத்திரமாக்கி பிரியாவை முதன்மை கதாநாயகியாக மாற்றினார்கள்.

Image result for இயக்குனர் ஓமர் லாலு ப்ரியா வாரியர்

கடந்த மாதம் ஒரு அடர் லவ் ரிலீசானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், இயக்குனர் ஓமர் லாலு ப்ரியா வாரியர் மீது புகார் அளித்துள்ளார். அதென்னவென்றால், படத்தினால் புகழ் கிடைத்த பின்னர் பிரியா வாரியர் பட புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.

பட ரிலீசுக்கு பிறகு நடந்த படத்தை பிரபலபடுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது சரியில்லை. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்