‘இந்தியன்-2’ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்!! மீண்டும் எப்போது தொடங்கும்?!!
- இந்தியன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணி இந்தியன் 2வில் இணைகிறது.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
- காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த பட ஷூட்டிங் வேகமாக நடந்து வந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18இல் நாடாளுமன்ற தேர்தல் வருவதாலும், அதில் கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியும் போட்டியிடுவதாலும் அதற்கான வேலைகள் அதிகம் இருப்பதால் ஷூட்டிங்கை தற்போது நிறுத்தி வைத்து விட்டு, மே மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU