‘தடம்’ 10 நாள் வசூல் நிலவரம்! அருண் விஜய் திரை பயணத்தில் பெஸ்ட்!!!
- தடையற தாக்க திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் , மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் தடம்
- அருண் விஜயின் குற்றம் 23 பட வசூலை விட தடம் வசூல் அதிகமாகும்.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக வெற்றிகரமான ஹீரோ ஆவதற்கு நடிகர் அருண் விஜய் மிகவும் கஷ்டப்பட்டு கதைகளை கட்சிதமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின் திரைப்படங்களில் தடையற தாக்க முக்கியமான திரைப்படம். அந்த பட இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தடம்.
இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார். க்ரைம் த்ரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. இந்த படம் 10 நாட்களில் சுமார் 14.2 கோடி வசூல் செய்துள்ளது. இது இவரின் முந்தைய சோலோ ரிலீஸ் திரைப்படமான ‘குற்றம் 23’ பட வசூலை விட அதிகமாகும்.
DINASUVADU