ஜீன்ஸ் பேண்டை பயன்படுத்தி கடலில் உயிர் தப்பிய ஜெர்மனி வாலிபர்!!!

Default Image
  • ஆர்னே முர்கே மூன்றரை மணி நேர தேடுதலுக்குப்பின் மீட்கப்பட்டார்.
  • தமது ஜீன்ஸ் பேண்டில் உள்ள காலின் இரு நுனி பாகங்களையும் முடிச்சுப்போட்டு.
  • அதில் நீர், காற்று ஆகியவற்றை நிரப்பி இடுப்பு பகுதி துணியை இறுக்கி மிதவையாக பயன்படுத்தி உயிர் தப்பினார்.
நியூசிலாந்தில் தொலாகா பே என்ற கடற் கரையில் ஜெர்மனியைச் சேர்ந்த இரு சகோதர்கள்  28 கிலோ மீட்டர் தொலைவில் படகு ஒன்று மூலமாக பயணம் செய்தனர்.
அப்போது ஆர்னே முர்கே என்பவர் எதிர்பாராத விதமாக  தவறி  கடலில் விழுந்து விட்டார். ஆர்னே முர்கே கடலில் விழுந்ததை கூட கவனிக்காமல் அவரது சகோதரர் ரோவே சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து ஆர்னேவை காணவில்லை என்பதை அறிந்த ரோவே  நகராட்சி ஹெலிகாப்டர் மீட்பு சேவைக்கு தகவல் கொடுத்தார் .
ஆர்னே முர்கே மூன்றரை மணி நேர தேடுதலுக்குப்பின் மீட்கப்பட்டார்.ஆர்னே முர்கே ஜீன்ஸ் பேண்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர் வாழும் கலையை கற்றிருந்தார்.
தமது ஜீன்ஸ் பேண்டில் உள்ள காலின் இரு நுனி பாகங்களையும் முடிச்சுப்போட்டு அதில் நீர், காற்று ஆகியவற்றை நிரப்பி இடுப்பு பகுதி துணியை இறுக்கி மிதவையாக பயன்படுத்தி உயிர் தப்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்