சன்னி லியோனுக்கு பதிலாக களமிறங்கும் சனா கான்…!!!
- இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ படம் இயக்கப்பட்டு வருகிறது.
- சன்னி லியோனுக்கு பதிலாக சனா கான் நடனமாடி இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ படம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் ஆகும்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் விஷாலுடன் சன்னி லியோன் நடனமாட இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது சன்னி லியோனுக்கு பதிலாக சனா கான் நடனமாடி இருப்பதாக கூறப்படுகிறது. சில காலமாகவே கோலிவுட் பக்கம் வராமல் இருந்தவர் `அயோக்யா’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.