‘பார்ட்டி’ இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘சிக்ஸர்’!!!

Default Image
  • வெங்கட் பிரபு வெளியிட்ட ‘சிக்ஸர்’ பட போஸ்டர்
  • வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படம் வெளியாக உள்ளது
  • இவரது இயக்கத்தில் அடுத்ததாக மாநாடு படம் தயாராக உள்ளது.

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படமெடுத்து ஹிட்டாக்குவதில் இயக்குனர் வெங்கட் பிரபு கெட்டிக்காரர். இவர் இயக்கத்தில் தற்போது பார்ட்டி படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்து சிம்புவை கதாநாயகனாக வைத்து மாநாடு எனும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படங்களுக்கு இடையில் இவர் தற்போது வால்ட் என்டெர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு போஸ்டரை இன்று மாலை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ‘சிக்ஸர்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வைபவ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும், ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

வெங்கட் பிரபு தயாரித்துள்ள ‘ஆர்.கே.நகர் ‘ படத்திலும் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்த படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்