கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சியினர் சதி-முதலமைச்சர் பழனிச்சாமி
- அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .
- இன்னும் ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.
அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் சேலத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நம் கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சியினர் பல்வேறு சதிகளை செய்து வருகின்றனர்.கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருந்து முழு ஒத்துழைப்புடன் தேர்தலை சந்திக்க வேண்டும்.இன்னும் ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.