ராணுவ வீரர் கடத்திச் சென்றதாக வெளியான தகவல் உண்மை இல்லை பாதுகாப்புத்துறை அமைச்சகம் !!
- பட்காம் மாவட்டம் காசிபோரா சந்தூரா என்ற இடத்தில் வீட்டில் இருந்த முகமது யாசின் என்ற ராணுவ வீரரை பயங்கரவாதிகள் நேற்று மாலை கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதனால் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தி உள்ளன. கடந்த 7-ம் தேதி காஷ்மீரில் உள்ள எஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் பலர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் பட்காம் மாவட்டம் காசிபோரா சந்தூரா என்ற இடத்தில் வீட்டில் இருந்த முகமது யாசின் என்ற ராணுவ வீரரை பயங்கரவாதிகள் நேற்று மாலை கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்து உள்ளது. கடத்தப்பட்டதாக கூறப்படும் முகம்மது யாசீன் என்ற ராணுவ வீரர் பாதுகாப்பாக இருப்பதாகவும் இது தொடர்பான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.