பத்மாவதி படத்தை பற்றி எம்.ஏ செமஸ்டரில் கேள்விகள்

Default Image
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பத்மாவதி படத்தை பற்றியும் முத்தலாக் பற்றியும் கேள்விகள் கேட்கபட்டிருந்தது. இது எம்.ஏ பட்டபடிப்பில் செமஸ்டர் தேர்வு தாளில் கேள்வி கேட்கபட்டிருந்தது. அதில், ஜோஹர் பாரம்பரியம் என்ன சொல்கிறது?அலாவுதீன் கல்கி காலத்தில், ராணி பத்மாவதியின் ஜோஹர் குறித்து விவரிக்கவும்   என கேள்விகளை கேட்க பட்டுள்ளது. அந்த கேள்விக்கு  10 மதிப்பெண்கள் வழங்கபட்டுள்ளது.
மேலும் இதில், மூத்தலாக் குறித்த கேள்வியும் இடம் பெற்று உள்ளது. அந்த கேள்வியானது, முத்தலாக் குறித்து  விவாதிக்கவும் எனக் வினாவபட்டுள்ளது.
 செமஸ்டர் பேப்பரில் மத்தியகால இந்தியாவில் சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்த கேள்விகளும் சுல்தானிய ஆட்சியில்  முஸ்லிம் பெண்களின் நிலை குறித்த  கேள்வியும் இடம்பெற்று உள்ளது.
வரலாற்றுத் துறையின் பேராசிரியர் தபீர் கலாம் கேள்விதாளில் இத்தகைய கேள்விகள் இடம் பெற்று இருப்பதாக உறுதிப்படுத்தினார். கேள்வித் தாளை தயாரித்தவர்கள் விவரத்தை  யாரும் வெளியிடவில்லை. இதுகுறித்து  விசாரிக்க முற்படும்போது, இடைக்கால வரலாற்றுத் துறையின் உதவி பேராசிரியரான ராஜீவ் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் கிடைக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்