இந்தியா தாக்குதல் நடத்தியதை வரவேற்கிறேன் என கூறிய பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் !!!!
- ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பாகிஸ்தான் இருந்து செயல்படவில்லை என பாகிஸ்தான் ராணுவம் கூறி வருகின்றனர்.
- ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு என்னை இரண்டு முறை கொலை செய்ய பார்த்தது எனவும் பர்வேஷ் முஷரப் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 14 -ஆம் தேதி புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பற்றனர்.
புல்வாமா தாக்குதலால் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா சர்வதேச நாடுகளின் ஆதரவோடு செய்து வருகிறது.
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பாகிஸ்தான் இருந்து செயல்படவில்லை என பாகிஸ்தான் ராணுவம் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் தான் பயன்படுத்தியது என கூறியுள்ளார்.
மேலும் பர்வேஷ் முஷரப் கூறுகையில் ஜெய்ஷ் அமைப்பின் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை நான் வரவேற்கிறேன் என்றார்.
மேலும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு என்னை இரண்டு முறை கொலை செய்ய பார்த்தது எனவும் பர்வேஷ் முஷரப் கூறினார்.
அப்போது செய்தியாளர் பர்வேஷ் முஷரப்-விடம் நீங்கள் பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது ஏன் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டனர்,அதற்க்கு பர்வேஷ் முஷரப் அப்போது சூழல் வேறு மாதிரி இருந்தது என பதில் அளித்தார்.