காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
பாராமுல்லா மாவட்டத்தில் ஹந்த்வாரா பகுதியில் நேற்று இரவில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதைனையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள்மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
சில மணி நேரம் இந்த தாக்குதல் நீடித்தது. நடந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த துப்பாக்கிச்சண்டையின் போது பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சண்டை நிறைவு பெற்றுவிட்டது எனவும், தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தாக்குதல் நடைபெற்ற ஹந்த்வாரா, சோபார், பரமுல்லா, குப்வாரா ஆகிய பகுதிகளில் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது