தேதிமுக தனித்து போட்டி…? இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்!!
- வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது
- கடந்த சில வாரங்களாக தேமுதிக, அதிமுக மற்றும் திமுக கூட்டணியின் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இருமுனைப் போட்டி உறுதியாகி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
திமுகவின் கூட்டணி உறுதியாகி நேற்று இறுதி செய்யப்பட்டது. அதிமுகவில் தேதிமுக இணையும் என்று கடைசி வரை எதிர்பார்த்து காத்து இருந்தது. ஆனால் தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்காக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விஜயகாந்தை பலமுறை சந்தித்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.06) சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த விழாவின் மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் வைத்து பாராட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், நேற்று அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் அனைவரையும் (தேமுதிகவையும்) சேர்த்து பேனர்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் வைக்கப்பட்ட பேனர்களில் தேமுதிகவின் படம் இல்லை. காரணமாக அதிமுக தனித்துப் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.