திமுக கூட்டணியில் மதிமுக !! எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பது குறித்து தற்போது கூற முடியாது!!வைகோ சூசகம்
- திமுக – மதிமுக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.
- திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இந்நிலையில் திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-விடுதலை சிறுத்தைகள் கட்சி-இந்திய கம்யூனிஸ்ட் -இந்திய ஜனநாயக கட்சி-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்(புதுச்சேரியும் அடங்கும்) ஒதுக்கீடு செய்யப்பட்டது.விடுதலை சிறுத்தைகள் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-மதிமுக 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் திமுக – மதிமுக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் 21 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு, மதிமுக ஆதரவு அளிக்கும் . எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பது குறித்து தற்போது கூற இயலாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.