அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி!!ஒரு தொகுதி ஒதுக்கீடு!!
- அதிமுக-புதிய நீதிக்கட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
- அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.அதேபோல் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிமுக-புதிய நீதிக்கட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.