விஜயகாந்துடன் பன்னீர்செல்வம் சந்திப்பு!!! பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் உறுதியாக இருப்பார்- பன்னீர்செல்வம் உறுதி

Default Image
  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து முக்கிய நபர்கள் சந்தித்து வருகின்றனர்.
  • தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சில் இழுபறி நீடிக்கும் நிலையிலும் அக்கட்சி தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

Image result for விஜயகாந்த்

பின் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் அதிமுக + பாஜக+ பாமக  உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்ததாக பேட்டியளித்து விட்டு சென்றார்.

 

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

கடலூர் ,கள்ளக்குறிச்சி,தருமபுரி, ஆரணி, சிதம்பரம்,கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை  அ.தி.மு.கவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது.

அதேபோல்  கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகியவற்றை தேமுதிகவும் கேட்பதாலேயே தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி  நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியாகிவருகிறது.

ஆனால்  தமிழக பாஜகவின் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ,தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்,ரஜினிகாந்த,திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து சந்தித்ததே வருகின்றனர்.

இந்த சந்திப்புகள் அனைத்தும் அரசியலில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சில் இழுபறி நீடிக்கும் நிலையிலும் அக்கட்சி தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.மேலும் துணை முதலமைச்சருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றார்.

இதன் பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,நாங்கள் மரியாதை நிமித்தமாக கேப்டன் விஜயகாந்தை சந்திக்க வந்தோம். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருக்கிறது. இன்று அல்லது நாளை அதிகார பூர்வமாக தெரிவிக்கப்படும்.

அதேபோல்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதியாக இருப்பார் .எங்களிடம் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியுடனும் விஜயகாந்த் பேசினார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence