திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு!!ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயங்கும் விசிக ?

Default Image
  • திமுக கூட்டணியில் காங்கிரஸ்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • அதேபோல் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

திமுக  கூட்டணி:

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக-புதிய தமிழகம்  இணைந்துள்ளனர்.இவர்களுக்கான தொகுதி பங்கிடும் இறுதி செய்யப்பட்டு விட்டது.இந்நிலையில் திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர்.

Related image

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது.

அதேபோல்  திமுக கூட்டணியில்  இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி  பேச்சுவார்த்தையில் தொகுதி ஒதுக்கீடு:

கடந்த மாதம் 22 ஆம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதன் பின்னர்  இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி-திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளனர்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி: 

இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியின் நலன் கருதி, போட்டியிடும் சின்னம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.ஏற்கெனவே நாங்கள் பல தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை.உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது கட்சி நிர்வாகிகள் இடையே ஆலோசனை நடைபெறும்,அதன் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட  திமுக கூறிய நிலையில் அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.அதனால் தான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரை வந்தது.மேலும் இன்றும் திருமாவளவன் பேட்டியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.எனவே அவர் உதயசூரியன் சின்னத்தில் ஆலோசனையில் ஈடுபடுவது என்று கூறியது திமுக கூட்டணியில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்