புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ட்வீட்….!!!
- புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ட்வீட்.
- புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு முன்பாக புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், இதற்க்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மார்ச் 3ம் தேதி பிரபல இதழ் ஒன்றில் புலனாய்வு கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த புலனாய்வு கட்டுரையில், ‘புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி’ என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், டெல்லியிலும் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு புலனாய்வு மையம் என்னவாகி விட்டது எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.
இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டுகளுக்கு அரசு கட்டாயம் பதில் சொல்லியே தீர வேண்டும்என்றும், புல்வாமா சம்பவம் ஏதோ ஒரு சில நாளில் மறந்து விடக்கூடியது அல்ல. அது மிகவும் தீவிரமானது’ என்றும் தனதுபக்கத்தில்பதிவிட்டுள்ளார்.