கூட்டணி எவ்வாறு அமைந்தாலும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும்.!!!

Default Image
  • மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
  • மக்களவை தேர்தலில் கூட்டணி எவ்வாறு அமைந்தாலும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார்.

இதில் மக்களவை தேர்தலில் கூட்டணி எவ்வாறு அமைந்தாலும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்