நரசிம்ம அவதாரம் எடுத்தது போல் பிரதமர் மோடி பயங்கரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார்-பன்னீர்செல்வம்
- கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
- நரசிம்ம அவதாரம் எடுத்தது போல் பிரதமர் மோடி பயங்கரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இதில் தமிழக ஆளுநர்,முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பங்கேற்றனர்.
அதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், நரசிம்ம அவதாரம் எடுத்தது போல் பிரதமர் மோடி பயங்கரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார்.
இந்த விழா விரைவில் அடையவுள்ள இமாலய வெற்றிக்கான தொடக்க விழா ஆகும். எதிர்க்கட்சிகள் பாராட்டும் வகையில் பிரதமரின் செயல்பாடு உள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.