சிவராத்திரி பூஜைக்கு செய்ய வேண்டியவை???
சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம். இரவில் சிவனுக்கு செய்யப்படும் பூஜைகள் குறித்த முழு விவரம்….
முதல் ஜாமம்:
- பஞ்சகவ்ய அபிசேகம் – சந்தனப்பூச்சு – வில்வம், தாமரை அலங்காரம் – அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் – ருக்வேத பாராயணம்.
இரண்டாம் ஜாமம்:
- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் – பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் – வில்வம் அர்ச்சனை – பாயாசம் நிவேதனம் – யசுர் வேத பாராயணம்.
மூன்றாம் ஜாமம்:
- தேன் அபிசேகம் – பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் – வில்வம் அர்ச்சனை – எள் அன்னம் நிவேதனம் – சாமவேத பாராயணம்.
நான்காம் ஜாமம்:
- கரும்புச்சாறு அபிசேகம் – நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் – அர்ச்சனை – சுத்தான்னம் நிவேதனம் – அதர்வன வேத பாராயணம்.
அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையும், உச்சிக்கால பூஜையையும் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
அதன் பின் உபதேசம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.