விளம்பரத்திற்க்கு மட்டும் 3,755 கோடி செலவு செய்த பாஜக அரசு
பாரதிய ஜனதா கட்சியானது, ஆண்ட இந்த மூன்றரை ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் 3,755 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராம்வீர் தன்வர் என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவலை அவர் பெற்றார்.
இதனை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை, பாஜக அரசானது, விளம்பரங்களுக்கு மட்டும் 1,754 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரத்து 616 ரூபாய் செலவு செய்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடகங்களுக்காக ரூ.1,656 கோடியும், மற்ற விளம்பரப் பதாகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றிற்காக ரூ.399 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையானது, முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்படுவதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.