ஓக்கி புயலில் சிக்கி தப்பிய நாகை மீனவர்கள்! குடும்பத்தினர் மகிழ்ச்சி…

Default Image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் காலனியைச் சேர்ந்த அஞ்சப்பன், சின்னையன், கல்விச்செல்வன், இளங்கோவன் உட்பட 13 பேர் மீனவர்கள் ராஜி என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த மாதம் 26ம் தேதி கன்னியாகுமரி பகுதியில் உள்ள தூத்தூரில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது ஓகி புயலில் சிக்கிய அவர்களின் படகு சிதிலம் அடைந்து, சின்னபின்னமானது.

இதில், தத்தளித்த மீனவர்களை கேரள அரசு மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் சொந்த ஊரான புஷ்பவனத்திற்கு திரும்பிய மீனவர்களை, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். உயிர் தப்பிய மீனவர்களுக்கு தற்போது உடல்நிலை சரியில்லாததால், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஓகி புயலில் சிக்கி தப்பிய வேதாரண்யம் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியதால், அவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்