இந்தியா – ஆஸ்திரேலியா! முதல் 10 ஓவர்களின் இந்திய அணி தடுமாற்றம்! 74க்கு 3!!
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்காள் ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.
லோகேஷ் ராகுல் சரவெடியாக வெடித்து, அவர் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை இழந்தார். தவான் கடுமையாக போராடி 24 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் ஆறு பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்து வெளியேறினார். தற்போது கோலி 9 ரன்னுடனும் தோனி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.