பிரதமர் தலைமையில் ஆலோசனை….நிலைமை குறித்து மோடியுடம் விளக்கும் அஜித் தோவல்…!!

  • பயங்கரதவாதிகள் முகம் மீது இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியதால் தொடர்ந்து பதற்றமான நிலையில் இருக்கின்றது.
  • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமர் மோடியுடன் பதற்றம் குறித்து விளக்கி வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை மட்டமாக்கப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.இதற்க்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லை பகுதியில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கபட்டுள்ளது.இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.இதனால் இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் தொடர் பதற்றம் நீடிக்கின்றது.இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தற்போதைய சூழல் குறித்து பிரதமரிடம் விளக்கி வருகின்றார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment