மேற்கூரை விழும் நிலையில் அரசு பள்ளி : அச்சத்தில் பள்ளி மாணவிகள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி கட்டிடங்கள் மேற்கூரை பெயர்ந்தும் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டும் இருகின்றன. இதனால் இந்த கூரை எப்போது விழும் என்கிற பயத்துடன் மாணவிகள் இருகின்றனர்.
மேலும் பள்ளிகளில் அருகிலிருந்து வரும் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் சுமார் 3200 மாணவிகள் பயில்கின்றனர். 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதனை அரசு விரைந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.