“தமிழரசன் “திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியானது !!!!
- விஜய் ஆன்டனி பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “தமிழரசன் ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
தமிழ் சினிமாவில் விஜய் ஆன்டனி இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் திகழ்கிறார்.இவர் பிரபல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத் துள்ளார்.இந்நிலையில் இவர் 2012-ம் ஆண்டு ஜீவா சங்கர் இயக்கத்தில் “நான் ” திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகராக நடித்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து “சலீம் ” , “பிச்சைக்காரன் ” , “அண்ணாதுரை ” போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் விஜய் ஆன்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “தமிழரசன் ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியானது.