அதிமுகவை சீண்டுவதை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும்-தேமுதிகவிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
- மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
- தேமுதிகவிற்க்கு வாக்கு வாங்கியே இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.அவர் பேசுகையில், நாங்கள் விஜயகாந்த்தை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தோம்.அதிமுக கூட்டணி குறித்து அவரது மகன் தரக்குறைவாக பேசியுள்ளது முறையல்ல. தேமுதிக சின்ன பையனைவிட்டு பேசவைக்க வேண்டாம். நாங்க ரொம்ப பேசுவோம் மார்ச் 5க்கு பிறகு வேடிக்கையை வச்சுக்கிறோம். எது வருது, எது போகுது என பார்ப்போம்.அதேபோல் அதிமுகவை சீண்டுவதை அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும்.உங்களுக்கு வாக்கு வாங்கியே இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.