” மத பயங்கரவாதத்தை முறியடிப்போம் ” ஸ்டாலின் சூளுரை….!!
- கருணாநிதியின் மறைவை அனுசரிக்கும் வகையில் தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .
- மத பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்று ஸ்டாலின் சூளுரைத்தார்.
கருணாநிதியின் மறைவை அனுசரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு திராவிட இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. அந்த வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் திருச்சியில் கருணாநிதியின் தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய ஸ்டாலின் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு இதெல்லாம் கெடுகிறது கேடு விளைவிக்கக் கூடிய சூழ்நிலை வருகிறதோ அதற்கு எதிராக போராடியவர் அண்ணன் வைகோ. தொகுதி உடன்பாட்டை முடித்துவிட்டு அவர் சீக்கிரம் தேர்தல் பரப்புரைக்கு செல்ல வேண்டும் என்று கூறிய ஸ்டாலின் மத பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்று கூறி தனது உரையை முடித்தார்.