- கன்னியாகுமரியில் வாகனம் மற்றும் பைக் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்துலே உயிரிழந்தனர்.
- விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடியதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியின் அருகே இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரம் மேம்பாலத்தில் அருகே 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது.இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார்.சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தப்பி ஓடிய கார் ஓட்டுனரை கண்டு பிடிக்க அருகில் இருக்கும் CCTV பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.