#INDVAUS:கடைசி பந்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி !!தொடரில் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா!!
- ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
- இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 126 ரன்கள் சேர்த்தது.அதிரடியாக ஆடிய ராகுல் 10 ஓவர்களின் முடிவில் 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.