ஆஸி பந்துவீச்சில் அடி பணிந்த இந்தியா!! 20 ஒவர்களுக்கு 126 ரன் மட்டுமே சேர்ப்பு!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் சார்பில் ஷிகர் தவானுக்கு பதில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினார்.
அதிரடியாக ஆடிய ராகுல் 10 ஓவர்களின் முடிவில் 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து ஆடியது.
பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியால் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. கோலி 24 ரன்களிலும் பன்ட் 3 ரன்களிலும் தினேஷ் கார்த்திக் மற்றும் க்ருனல் பாண்டியா ஆகியோர் வெறும் ஒரு ரன்னிலும் தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினர். கடைசியாக தோனி மட்டும் ஓரளவிற்கு இழுத்துப் பிடித்து ஆட 29 ரன் அடித்தார் .அதன் காரணமாக 20 ஓவர் முடிவில் இந்திய அணி 126 ரன்கள் சேர்த்தது.