சென்னையில் கார் குடோனில் பெரும் தீவிபத்து!!தீப்பிடித்து எரியும் 200-க்கும் மேற்பட்ட கார்கள்!!
நேற்று விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்தது. இந்த கார்கள் அனைத்தும் விமான கண்காட்சியை பார்க்க வந்த பார்வையாளர்களின் கார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.பின்னர் தீ அணைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை போரூர் அருகே தனியார் வாடகை கார்கள் நிறுத்துமிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 200-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கார்களில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் 4க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளது.