” ஸ்டாலின் அனைத்தையும் பேசினார் ” எதையும் சந்திக்க தயார்….போட்டுடைத்த பிரேமலதா…..!!
- தேமுதிமுக_வை தங்களின் கூட்டணிக்கு இழுக்க அதிமுக , திமுக தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
- ஸ்டாலின் சந்தித்த போது அனைத்தையும் பேசினார்கள்.எதையும் சந்திக்க தயார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதே போல தமிழகத்தில் உள்ள திமுக , அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு தேமுதிகவை இழுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.அதே போல மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விஜயகாந்தை சந்தித்ததை தொடர்ந்து முக.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.மேலும் உடல்நலம் குறித்து பேசியதாக இருவரும் பேட்டியளித்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , உடல்நலம் குறித்து விசாரித்த ஸ்டாலினுக்கு நன்றி. ஸ்டாலின் சந்தித்த போது உடல்நலத்திற்கு அப்பாற்பட்டு அனைத்தும் பேசப்பட்டது. 3_ஆவது அணி அமைய வாய்ப்பில்லை.உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் தனித்து போட்டியிடுவதை உருவாக்கியவர் கேப்டன் எனவே எல்லாத்தையும் சந்திக்க தயாரக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.