தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் வெளியீடு!!!
தல அஜித் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தை சிவா இயக்கி இருந்தார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் அப்பா மகள் பாசத்தை குடும்ப பாசத்துடனும், ஆக்ஷ்னுடனும் கதையமைக்கப்பட்டிருந்தது.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தியேட்டர்காரர்களுக்கு வசூலும் மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்நிலையில் இப்படம் தற்போது தெலுங்கிலும், கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு ரிலீஸிற்கு தயாராகி விட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது தெலுங்கில் டப்பான விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU