அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கூட்ட்டறிக்கையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நாம் தேர்தலில் வெற்றி பெற அயராது உழைப்போம் என வீர சபதம் எடுப்போம் என தெரிவித்திருந்தனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளில் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தொண்டர்களுக்கு பின்வரும் வேண்டுகோள்கள் இருந்தது .
அதில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அயராது உழைப்போம் என ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழாவில்
வீர சபதம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.மேலும் அதில் கூறியிருந்ததாவது , பல்வேறு சோதனைகளுக்கு இடையே அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் 1998 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைத்தது போல தேச நலன் காக்கும் கூட்டணியை உருவாக்கி உள்ளது.நம்முடைய அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சி மதச்சார்பின்மை சமூக நீதி தமிழின எழுச்சி ஆகியவற்றோடு அதிமுக தனது அரசியல் பயணத்தை தொடரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.