பாகிஸ்தானுடன் விளையாடி ஜெயிக்க வேண்டும்…..சச்சின் டெண்டுல்கர் கருத்து…!!
- காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதி அவர்களை வீழ்த்த வேண்டுமென்று சச்சின் டெண்டுலகர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாக்கிஸ்தான் அணியுடன் விளையாட்டு மற்றும் அனைத்து தொடர்பையும் துண்டிக்க வேண்டுமென்று பல்வேறுதரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக உலக கோப்பையில் பாக்கிஸ்தான் அணியுடன் இந்தியஅணி விளையாடக்கூடாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் , இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் விளையாடாமல் புறக்கணிப்பதைவிட இந்திய அணி விளையாடி பாகிஸ்தான் அணியை தோற்கடிக்க வேண்டும் .புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடாமல் பாக்கிஸ்தான் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி இந்த விவகாரத்தில் அரசு எடுக்கும் முடிவை தாம் ஆதரிப்பதாகவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.