” யாசின் மாலிக் கைது ” காஷ்மீரில் பதற்றம்…போலீசார் குவிப்பு…!!
- சிறப்பு அந்தஸ்த்து கேட்டு காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அந்தஸ்த்து சட்டப்பிரிவை ரத்து செய்யும் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு மாநிலம் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பல்வேறு கட்டமாக போராட்டம் நடைபெறுகின்றது.இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது இந்த மனு மீதான விசாரணை வருகின்ற திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் ஏற்படலாம் என்று உளவுத்துறை மற்றும் காவல்துறை தெரிவிக்கின்றனர்.இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் காஷ்மீர் மாநில பிரிவினைவாத தலைவர்களில் ஒருவராக இருந்து வரும் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். மேலும் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.