” பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடையாது ” இந்தியாவின் நடவடிக்கை ஆரம்பம்….!!
- காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளில் நீரை தடுக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்திய நாட்டில் உற்பத்தியாகி பாகிஸ்தான் நாட்டுக்குள் செல்லும் ராவி, சட்லெட்ஜ், பியாஸ் ஆகிய நதிகளின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.கடந்த 2016 ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போதும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது