” விஜயகாந்தை சந்தித்ததில் எந்த தவறுமில்லை ” கனிமொழி பேட்டி…!!
- திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
- விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பதில் எந்த தவறுமில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.பின்னர் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாக அவர் தெரிவித்தார்.ஏற்கனவே அதிமுக கூட்டணி தேமுதிகவிடம் பேசிவரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியதுவை வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இதையடுத்து தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற பொது
செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததில் எந்த தவறுமில்லை என்று தெரிவித்தார்.