திமுக – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி!! இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!!

Default Image
  • திமுக – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக கட்சிகள் சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்