வாட்சப், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்த இனி வரி கட்டணுமாம்! சோதனை மேல், சோதனை..!

Default Image

இன்று பல சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் பேஸ்புக், வாட்சப் போன்றவை தான் முன்னிலையில் உள்ளது. இவற்றை முந்துவதற்கு இன்னும் சரியான செயலிகள் வரவில்லை. தினமும் காலையில் எழுந்ததும் பேஸ்புக், வாட்ஸப் முன் கண் விழிப்பவர்கள் தான் இங்கு அதிகம். இவை நமக்கு உறவின் உறவாகவே மாறிவிட்டன. இந்த உறவை இனி தொடர வேண்டுமென்றால் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என ஒரு அரசாங்கம் சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை பற்றிய முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் அறியலாம்.


எந்த நாடு?
கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் தான் இப்படிபட்ட புதுவித சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டமானது கடந்த ஜுலை 1,2018 முதல் அமலுக்கு வந்தது. இதை வலைத்தள வரி (Social Media Tax) என்பதன் அடிப்படையில், வரியாக வசூலிக்க அந்நாடு முடிவு செய்தது. ஆனால், இதன் முடிவு விபரீதத்தில் முடிந்ததுள்ளது.

நஷ்டம்
இப்படி வரி விதித்தால் சுலபமாக மக்களிடம் இருந்து பணத்தை வரியின் மூலமாக பெறலாம் என அந்நாட்டு அரசு நினைத்துள்ளது. ஆனால், இவை அதற்கு எதிர்மாறாக தான் நடந்தது. இந்த சட்டத்தால் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்து அரசுக்கு இழப்பை தந்துள்ளது.

மக்கள்!
இந்த சட்டத்தை அமல்படுத்திய பின் சுமார் 30 லட்சம் பேர் இணையத்தை பயன்படுத்துவதையே நிறுத்தி விட்டனர். இதனால் அந்நாட்டு அரசுக்கு முன்பு கிடைத்த வரி கூட இப்போது கிடைப்பதில்லை. ஜூலை 2018 முதல் செப்டம்பர் 2018 வரை 1,60,98,825 பேர் இன்டர்நெட்டை பயன்படுத்தி உள்ளனர். ஆனால், இது அப்படியே பெரிய அளவில் குறைந்து, செப்டம்பரில் 1,35,79,150 பேர் மட்டுமே இணையத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


அரசாங்கம்
இது போன்று பேராசையில் தேவையற்ற வரிகளை கொண்டு வந்தால் நிச்சயம் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதற்கு இந்த உகாண்டா வரி சட்டம் சிறந்த எடுத்து காட்டாக விளங்கும். இனி மற்ற நாடுகள் இதை போன்ற சட்டங்கள் இயற்றுவதற்கு முன் ஒரு கணம் நிச்சயம் யோசிப்பார்கள் என எதிர்பாக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்