” இந்தியாவுக்கு பதிலடி கொடுங்கள் ” பாகிஸ்தான் அரசு ஆணவ அறிக்கை…!!
- ஜம்முகாஷ்மீரில் உள்ள புல்மாவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
- விபரீத எண்ணத்தில் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டால் பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது .
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தளபதி , துணை தளபதிகள் , உளவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.இந்த கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப்பு ஒன்றை வெளியிட்டது.
அந்த செய்தி குறிப்பில் இந்தியா_வுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாராவது பாக்கிஸ்தான் மண்ணை தவறாக பயன்படுத்துவதாக இந்திய அரசு ஆதாரங்களை அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பு மற்றும் விபரீத எண்ணத்தில் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டால் பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.