” மோடிக்கு சியோல் அமைதி விருது ” தென்கொரிய அரசு வழங்கியது…!!
- இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி தென்கொரியா சென்றுள்ளார்.
- இந்தியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கிடையே இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
- பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டு 1 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக தென்கொரியா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலுக்கு சென்ற பிரதமர் மோடி_க்கு தென்கொரியா நாட்டின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையாக பார்க்கப்பட்ட இதில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் , இந்தியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கிடையே இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதையடுத்து தென்கொரியா தலைநகரில் சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது.இந்த விருதை மோடி பெற்றதால் அவருக்கு விருதுத் தொகையாக 1 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.இதை பிரதமர் மோடி கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.